பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : டிச 02, 2019
Advertisement

தொட்டியில் தண்ணீர் இல்லை: கரூர் அருகே ஆண்டாங்கோவிலில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, போர்வெல் போடப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக, அதில் தண்ணீர் இல்லை. வெறும் காட்சி பொருளாக சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. இதனால், தொட்டி சேதம் அடைந்துள்ளது. அதில், நாள்தோறும் போர்வெல் தண்ணீரை, மின் மோட்டார் மூலம் நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடையில் குடிநீர் குழாய்: கரூர் நகராட்சி பகுதியில் நடந்து வரும், புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்காக, பல இடங்களில் குழாய்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜாஜி சாலையில் உள்ள, சாக்கடை கழிவுநீர் செல்லும் கால்வாயில், ராட்ச குழாய் விழுந்துள்ளது. அதை நகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லாமல், தேங்கியுள்ளது. குழாய்களை அகற்றி, கழிவு நீர் செல்ல நடவடிக்கை தேவை.

சாய்ந்த நிலையில் விளக்கு கம்பம்: கரூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் வணிக வரி துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால், அந்த வளாகத்தில் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. எந்த நேரத்திலும், கம்பம் கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரத்தில் விளக்குகள் எரிவது இல்லை.

குப்பையை அகற்றலாமே: கரூர், காமராஜ் தினசரி மார்க்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சில நாட்களாக அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் மக்கள், குப்பை நிறைந்த பகுதியில் செல்ல முடியவில்லை. மேலும், கரூரில் மழை பெய்து வரும் நிலையில், குப்பை அழுகாத வகையில், நாள்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடைந்த தடுப்பு சுவர்களால் சிக்கல்: கரூர், ஜவஹர் பஜாரில் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளன. இதற்காக, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, சாலையின் குறுக்கே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. தற்போது, பல இடங்களில் தடுப்பு சுவர்கள் உடைந்துள்ளன. அதை, நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், தடுப்பு சுவர்கள் மேலும் உடையும் அபாயம் உள்ளது. தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X