தமிழ்நாடு

ஒரு மணி நேரம் மழைக்கு தாங்காத கரூர்: தூர்வார மக்கள் எதிர்பார்ப்பு

Added : டிச 02, 2019
Share
Advertisement
கரூர்: கரூர் நகரில் நேற்று பெய்த, ஒரு மணி நேரம் மழையில், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டும் முன், சாக்கடை கால்வாய்களை தூர் வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் நகரில் கடந்த, நான்கு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந் நிலையில், நேற்று மதியம், 1:00 மணி முதல், 2:00 மணி வரை கரூர் நகரம், பசுபதி பாளையம், வெங்கமேடு,

கரூர்: கரூர் நகரில் நேற்று பெய்த, ஒரு மணி நேரம் மழையில், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டும் முன், சாக்கடை கால்வாய்களை தூர் வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் நகரில் கடந்த, நான்கு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந் நிலையில், நேற்று மதியம், 1:00 மணி முதல், 2:00 மணி வரை கரூர் நகரம், பசுபதி பாளையம், வெங்கமேடு, திருமாநிலையூர், சுங்ககேட், காந்திகிராமம், திருகாம்புலியூர், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது, கோவை சாலை, ஜவஹர் பஜார், தின்னப்பா கார்னரில் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பொதுமக்கள் கார், டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திருச்சி சாலை தெரசா கார்னரில், இடுப்பு அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பசுபதிபாளையம் குகை வழிப்பாதை, பெரிய குளத்துப்பாளையம் குகை வழிப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், ' கரூர் நகராட்சி பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, பல மாதங்களாகிறது. மண், பிளாஸ்டிக் பொருட்களால், அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லை. இந்நிலையில், இன்று (நேற்று) பெய்த மழை, அடைப்பு காரணமாக கால்வாயில் செல்லாமல், சாலைகளில் ஓடியது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் காட்டும் முன், கரூர் நகராட்சி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். கரூர் நகரில் கடந்த, ஒரு மாதமாக எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை. கடந்த, நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையால், கூடுதல் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, சாக்கடை கால்வாய்களை, போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 5, அரவக்குறிச்சி, 35, அணைப்பாளையம், 5, க.பரமத்தி, 6.8, குளித்தலை, 7, தோகமலை, 4, கிருஷ்ணராயபுரம், 7.4, மாயனூர், 8, பஞ்சப்பட்டி, 10.6, கடவூர், 24.6, பால விடுதி, 25.1, மயிலம்பட்டி, 16 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 12.88 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X