தமிழ்நாடு

அமராவதி அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : டிச 02, 2019
Advertisement

கரூர்: அமராவதி அணைக்கு வரும், தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், கரூர் மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த அக்., 20 முதல் முறை வைத்து, பாசனத்துக்காக ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால் பகுதியில், விவசாயிகள் சாகுபடி பணியை மேற்கொண்டனர். இந்நிலையில், அமராவதி அணைக்கு வரும் தண்ணீர் குறைவு மற்றும் அமராவதி ஆற்றுப் பகுதிகளில் பெய்த மழை, களை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டதால் கடந்த, 28 ல் ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. கேரள மாநிலம் உள்ளிட்ட, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு வினாடிக்கு, 818 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று முன்தினம், 755 கன தண்ணீர் வந்தது. புதிய வாய்க்கால் மற்றும் அமராவதி ஆற்றில், தண்ணீர் திறக்கப்படவில்லை. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 65.52 அடியாக இருந்தது. தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்ற மகிழ்ச்சியில், கரூர் மாவட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 7,370 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 6,850 கன அடியும், நான்கு கிளை வாய்க்காலில், 520 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.


* கரூர் கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 60 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 23.54 அடியாக இருந்தது. மழை காரணமாக அணையில் இருந்து, நொய்யல் வாய்க்காலில், 130 கன அடி தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நேற்று காலை நிறுத்தப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X