சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெய்தலூரில் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை முயற்சி

Added : டிச 02, 2019
Advertisement

குளித்தலை: நெய்தலூரில், ஐ.ஓ.பி., வங்கி வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற போது, போலீசார் ரோந்து வாகனம் வந்ததால், மர்ம நபர்கள் தப்பினர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூரில் ஐ.ஓ.பி., வங்கி கிளை உள்ளது. இங்குள்ள வளாகத்தில் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை, 1:45 மணியளவில் ஏ.டி.எம்., மையத்திற்குள் மர்ம நபர்கள் இருவர், முகமூடி அணிந்து உள்ளே புகுந்தனர். வங்கி முன்பகுதியில் வைத்துள்ள, 'சிசிடிவி' கேமரா, எச்சரிக்கை அலாரத்தை துண்டித்து விட்டு, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் வாகனத்தை பார்த்ததும், இருவரும் அங்கிருந்து தப்பினர். பின்னர், தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நங்கவரம் போலீசார் ஏ.டி.எம்., மையத்தின் உள்ளே சென்று, நோட்டில் கையெழுத்துடுவதற்காக சென்றபோது, ஏ.டி.எம்., அருகே பெரிய கல் ஒன்று கிடந்துள்ளது.


மேலும் ஏ.டி.எம்., இயந்திரத்தை சோதனை செய்த போது, உடைந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், போலீஸ் அதிகாரிகளுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில், இரவு ரோந்து பணியில் இருந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதணை நடத்தினர். இது குறித்து, வங்கி கிளை மேலாளர் முகேஷ்குமார் ரஞ்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஏ.டி.எம்., இயந்திரத்தில் வைத்திருந்த பணத்தை சோதனை செய்த போது, ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளை போகாமல் தப்பியது தெரிந்தது. மேலும், ஏ.டி.எம்., மையத்தின் மேல் பகுதியில் வைத்துள்ள கண்காணிப்பு கேமராவில், சிவப்பு கலர் சட்டை, கத்தரிப்பூ கலர் சட்டையுடன், இருவர் முகமூடி அணிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. குளித்தலை டி.எஸ்.பி., கும்மராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் தடவியல் நிபுணர்கள், வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X