பஸ் ஸ்டாண்டில் நாய்களால் அவதி: குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில், காலை மற்றும் மாலையில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை, அங்கு சுற்றித்திரியும் நாய்கள் விரட்டுகின்றன. அச்சம் கொண்டு ஓடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். வயதானவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நாய்களை பிடிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.
- மா.விஸ்வநாதன், குமாரபாளையம்.
வேகத்தடை அமைக்க வேண்டும்: ஆத்தூர் பிரதான சாலையில் நாமகிரிப்பேட்டை அமைந்துள்ளது. இங்கிருந்து, திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமிருக்கும். பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கல்லூரி வாகனங்கள் நின்று செல்ல பொதுவான இடத்தை ஒதுக்க வேண்டும். வேகத்தடை அமைக்க வேண்டும்.
- பி.முத்து, மெட்டாலா.