தமிழ்நாடு

மாவட்டத்தில் இரு நாட்களாக மழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : டிச 02, 2019
Advertisement

நாமக்கல்: இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால், மாவட்டம் முழுவதும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தில், பரவலாக கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கனமழை இல்லை என்றாலும், கடந்த இரண்டு நாட்களாக, சாரலுடன் மழை பெய்து வருகிறது. 24 மணி நேரமும் விட்டு விட்டு லேசான மழை பரவலாக பெய்கிறது. நேற்று காலை, 8:00 மணிக்கு பெய்ய துவங்கிய மழை, சிறிது நேர இடைவெளி விட்டு மீண்டும் பெய்தது. அதனால், மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது. வேறு வழியின்றி, மழையில் நனைந்தபடியும், குடை பிடித்துக் கொண்டும், மக்கள் தங்களது அன்றாட பணியை மேற்கொண்டனர். மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பள்ளங்களிலும் தேங்கி நின்றது. கடந்த, மூன்று மாதங்களாக நாமக்கல் மாவட்டத்தில், பருவமழை பெய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேபோல், குளம், குட்டை, ஏரி மற்றும் கிணறுகளில் தண்ணீர் நிரம்பி வருவதால், சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம், மாவட்டத்தில், 60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு: எருமப்பட்டி, 4, குமாரபாளையம், 1.20, மங்களபுரம், 9, மோகனூர், 2.50, நாமக்கல், 20, புதுச்சத்திரம், 2, ராசிபுரம், 6.40, சேந்தமங்கலம், 4, திருச்செங்கோடு, 5, கலெக்டர் அலுவலகம், 2, கொல்லிமலை, 10 என, 66.10 மி.மீ.,மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X