நாமக்கல்: நாமக்கல் அடுத்த, முசிறி மற்றும் புத்தூர் கீழ் முகம் கிராமத்தில், கனரக வாகன தொழிற்பேட்டை அமைந்துள்ளது. அங்கு, கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டார். கனரக வாகன தொழிற்பேட்டைக்கு, மின்தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை, பார்வையிட்ட கலெக்டர், தொழிற்பேட்டை பகுதியில், மரக்கன்றுகளை நட்டு வளர்க்க, கனரக வாகன தொழில்முனைவோருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திப்பள்ளி சமத்துவபுரத்தில், பயன்பாடற்ற ஆழ்துளை குழாய் கிணறு பாதுகாப்பான முறையில் மூடப்பட்டுள்ளதை, வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டார். ஆர்.டி.ஓ., கதிர்வேல், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.