பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையில் ஆய்வு செய்யும் பணி

Added : டிச 02, 2019
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பாலம் சாலையில் ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை, சேலம், திருச்சி, திருச்செங்கோடு, நாமக்கல், குமாரபாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோட்டிற்கு செல்ல, பள்ளிபாளையம் நான்குசாலை சந்திப்பு வழியாக வந்து தான் செல்ல வேண்டும். நாளுக்குநாள் போக்குவரத்து அதிகரித்து, நெரிசலாக காணப்படுகிறது. நான்கு சாலை சந்திப்பிலிருந்து, ஒன்தாம்படி வரை, சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, இரு வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நேரில் வந்து சாலையை பார்வையிட்டனர். தொடர்ந்து சர்வே பணியும், நில அளவீடு பணியும் நடந்தது. கடந்த, 26, 27 ஆகிய இரண்டு நாட்களும், நெடுஞ்சாலைதுறை சார்பில், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத்தில், திருச்செங்கோடு பிரிவுக்குட்பட்ட பள்ளிபாளையம் நான்கு வழி சாலை சந்திப்பின் அனைத்து வழித்தடத்திலும் டூவீலர், கார், பஸ், லாரி, ஆட்டோ, வேன் உள்பட எத்தனை வாகனங்கள் செல்கின்றன என, 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை கணக்கெடுத்தனர். இப்பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, ஓரிரு நாட்களாக, சாலை ஆய்வு செய்யும் அடுத்த கட்ட பணி தொடங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X