தேர்தல் கமிஷனர் பழனிசாமியா? எடப்பாடி பழனிசாமியா? : ஸ்டாலின்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (40)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுச்சேரி : தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமியா அல்லது எடப்பாடி பழனிசாமியா என கேள்வி எழுப்பி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு உள்நோக்கமுடையது என குற்றம்சாட்டி உள்ளார்.






தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் தேதி இன்று (டி.,02) வெளியிடப்பட்டது. இதில் டிச.,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு, அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது. நகர்புற உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் தேதி, நிர்வாக காரணங்களுக்காக இன்று அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி தெரிவித்தார்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.




இதுவரை உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இரு கட்டங்களாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் கமிஷனர் பழனிசாமியா? எடப்பாடி பழனிசாமியா? என்ற கேள்வி எழுகிறது. அதிமுக.,வுடன் மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. தேர்தல் முறையாக நடைபெற வேண்டுமென்ற நோக்கில்தான் திமுக, நீதிமன்றம் சென்றது. தமிழகத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுவது வேடிக்கையாக உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பில் உள்நோக்கம் இருப்பதாகவே திமுக கருதுகிறது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும்.
வார்டு வரையறை பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பதற்கு இதுவரை பதில் வரவில்லை. வார்டு வரையறை செய்யப்படாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தவறு என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-டிச-201900:53:08 IST Report Abuse
Rajagopal மாப்பிள்ளைப் பெயருக்கும், மாமனார் பெயருக்கும் தெரியாமல் குழம்பும் அரை மூளையுள்ள கட்சித் தலைவன், எது எந்த பழனிச்சாமி என்று குழம்புவது வியப்பாக இல்லை. இவனெல்லாம் முதல்வரானால் எத்தனை கேவலம்?
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-டிச-201918:50:45 IST Report Abuse
Sampath Kumar சபாஷ் சரியான கேள்வி இதுக்கு பதில் சொல்லாமல் அவரை கலாய்க்கும் கும்பல் உண்மையில் அரசியில் டபுரியாதவர்கள்
Rate this:
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
02-டிச-201920:52:17 IST Report Abuse
Bebetoஇப்பவே தோற்றதற்கு, காரணம் சொல்ல ஆரம்பிச்சுட்டார்யா....
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
02-டிச-201918:18:30 IST Report Abuse
Tamilselvan சுடலையும்,தீய சக்திகளும் உள்ளாட்சி தேர்தலிலும், வரும் சட்ட பேரவை தேர்தலிலும் துண்டை காணோம், துணியை காணோம் என்றும் விரட்டி அடிக்கப்படுவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X