பார்லி.,யில் எதிரொலித்த பெண் டாக்டர் கொலை

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (9)
Advertisement
LokSabha, RajyaSabha, RapeIssue, பார்லி, லோக்சபா, ராஜ்யசபா, தெலுங்கானா, பாலியல், பலாத்காரம், விவாதம்

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பார்லி.,யின் இரு அவைகளிலும் காரசார விவாதம் நடைபெற்றது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே, கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்திற்கு பிறகு இது குறித்து விவாதிக்க அனுமதி அளிப்பதாக கூறினார்.




அதே போல் ராஜ்யசபாவிலும் இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. காங்., உறுப்பினர்கள், இது போன்ற சம்பவத்தை எந்த மாநில அரசாங்கமும் விரும்பமாட்டார்கள். சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மட்டும் இந்த சிக்கலை தீர்க்க முடியாது. இத்தகைய குற்ற செயல்களை ஒழிக்க, அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தேவை உள்ளது. அவசரகால அடிப்படையில் அனைத்து அமைப்புகள், நீதித்துறை, சட்டமன்ற, நிர்வாக மற்றும் பிற அமைப்புகள் ஒன்றிணைந்து சமூக சீர்திருத்தத்தை அமைக்க வேண்டும், என அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட்டனர்.

இதற்கு வெங்கையா நாயுடு, குற்றவாளிகள் கருணைக்கு தகுதியற்றவர்கள். இது சமூகத்திற்கு அவமானமாகும். இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு புதிய மசோதா தேவையில்லை, அரசியல் ரீதியான நடவடிக்கையே போதுமானது, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-201919:36:04 IST Report Abuse
ஆப்பு உருப்படாத விவாதங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-டிச-201915:39:03 IST Report Abuse
Endrum Indian டப்பா தட்டாதீங்கடா தண்டங்களா??முடிவெடுங்கள்???நீங்கள் செய்த ஜல்லடை ஓட்டை சட்டத்தால் தான் இப்படி ஒரு முடிவெடுக்காமல் ஒவ்வொரு வழக்கும் இழுபறியில் வருடக்கணக்காக இருக்கின்றது. நேற்று எனக்கு ஒரு வீடியோ வாட்சப்பில் வந்தது. அது உண்மையா இல்லை என்பதல்ல கேள்வி. அதில் சொன்ன கருத்து நன்றாக இருந்தது. சவுதியில் ஒரு கற்பழிப்பு. 15 நிமிடத்தில் கைது அவன் உடனே சுட்டுக்கொல்லப்பட்டான் மக்கள் மத்தியில். இதைத்தான் நாமும் எதிர்பார்க்கின்றோம் அரசியல் கூமூட்டைகளே, நீங்கள் தப்பிப்பதற்காக சட்டத்தை ஜல்லடை ஓட்டை சட்டமாக செய்வதை நிப்பாட்டுங்கள் முதலில். குற்றம் - கைது- 2 நாளில் தீர்ப்பு + தண்டனை முடித்து வாய்ப்பு என்று செய்ய சட்டம் செய்யுங்கள், எம் பி க்களே இதை அரசியல் ஆக்காமல் வெறுமனே பி ஜெ பி தப்பு, காங்கிரஸ் தப்பு என்று சொல்லாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
02-டிச-201915:18:38 IST Report Abuse
GMM வழக்குக்கு நீதிமன்ற கட்டணம் போல் விரும்பும் மக்கள்(தன் பாதிப்பு சார்ந்த மனு மட்டும்) மனுவுக்கும் கட்டணம் /காலம் நிர்ணயிக்கலாம். இந்த மனு மீது பதில் அரசு நிர்ணயிக்கும் கால எல்லைக்குள் கட்டாயம் கொடுக்க வேண்டும். மனு ஏற்று கொள்ளப்பட்டது/நிராகரிக்கப்பட்டது/உயர் அதிகாரிக்கு அனுப்பட்டது என்ற விவரம். இல்லாவிடில் அதிகாரிக்கு பணி நீக்கம்/பதவி உயர்வு இல்லை. பெரும்பாலும் சிவில் வழக்குகள் குறையும். வழக்கில் ஒருவர் பக்கம் நியாயம் இன்னொருவர் பக்கம் குற்றம் இருக்கும். (தீர்ப்பில் குற்றவாளி தெரிய வரும்) குற்றவாளிக்கு ஆதரவாக பணம் பெற்று வாதிடும் வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X