பொது செய்தி

இந்தியா

குஜராத்தில் நித்தியானந்தா ஆசிரமம் மூடல்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (19)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஆமதாபாத் : தனியார் பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்ததாக மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில் குஜராத்தின் ஹிராபுர் பகுதியில் செயல்பட்டு வந்த சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது.


ஹிராபுர் பகுதியில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமம் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில் தனியார் பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக நித்தியானந்தா ஆசிரமம் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. பள்ளி வளாகத்தில் ஆசிரமம் செயல்பட அனுமதி உள்ளதாக நித்தியானந்தா ஆசிரம நிர்வாகம் அளித்த சான்றிதழும் போலி என தெரிய வந்தது. இதனையடுத்து ஆசிரமம் செயல்படுவதற்கான உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரமம் உடனடியாக மூடப்பட்டது. ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஆசிரமம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. தனது இரு மகள்களையும் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்டுத் தரும்படி ஜெகநாதன் என்பவர் புகார் கூறி வந்த நிலையில் குஜராத்தில் இருந்த நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
02-டிச-201923:32:57 IST Report Abuse
Krishna All Anti-Sanyasi Actions May Be Due To Commission Problem (So far No Actions Despite Their Long Misuses) BUT All LAVISH-LUXURY Sanyasi Groups (all Religions) Must Be Arrested & Prosecuted for Misusing Religion, All Powers & Exploitations.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-டிச-201918:55:48 IST Report Abuse
Sampath Kumar உங்களால் அவரை ஒன்றும் செய்ய முடியாது இது தான் நிதர்சன உண்மை
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
02-டிச-201917:21:06 IST Report Abuse
இந்தியன் kumar சர்ச்சைக்குரிய அணைத்து நிறுவனங்களும் மூட பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X