இந்த செய்தியை கேட்க
ஜாம்நகர்: குஜராத்தில் திருமண ஊர்வலத்தில் மணமகன் வீட்டார் ரூ.90 லட்சம் பணமழையுடன் ஊர்வலமாக சென்று ஹெலிகாப்டரில் பறந்து திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்தேறியுள்ளது.

வடமாநிலங்களில் திருமண விழாக்கள், ஆன்மிக கச்சேரிகள் உள்ளிட்டவைகளில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிவது வழக்கமாகும். குஜராத்தின் ஜாம்நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரிஷி ராஜ் சிங் ஜடேஜா, தனது திருமண ஊர்வலத்தில் பணத்தை வாரியிறைத்தார். கடந்த நவ.,30ம் தேதி நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் மணமகன் வீட்டார் மற்றும் நண்பர்கள் சேர்ந்து பண மழை பொழிந்தனர்.

ரூ.90 லட்சம் மதிப்பிலான பணத்தை வாரியிறைத்ததாக மணமகன் வீட்டார் தெரிவித்தனர். பின்னர், மணமக்கள் ஹெலிகாப்டரில் பறந்து கண்ட் என்ற கிராமத்திற்கு சென்றனர். மேலும், மணமகனின் அண்ணன், ரூ.1 கோடி மதிப்பிலான காரை மணமக்களுக்கு பரிசாக அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE