பெண்களுக்கு இரவு பணி கூடாது : சர்ச்சையான தெலுங்கானா முதல்வரின் பேச்சு

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (40)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத் : போக்குவரத்து துறையில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.latest tamil news


தெலுங்கானாவில் பெண் டாக்டர் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து தெலுங்கானா மட்டுமின்றி டில்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பார்லி., இது தொடர்பான விவாதம் நடத்தப்பட்டு, கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இச்சம்பவம் பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், இப்போது பேசியுள்ள கருத்து சர்ச்சையாகி உள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அடுத்த நாளில் மற்றொரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளார். அவர்கள் மனிதர்களே அல்ல. மிருகங்கள். அதனால் தான் சொல்கிறேன், போக்குவரத்து துறையில் பெண் ஊழியர்கள் இரவு பணியில் பணி அமர்த்த வேண்டாம், என்றார்.


latest tamil news


ஐடி உள்ளிட்ட பல துறைகளில் பெண்களுக்கு இரவு பணி வழங்க வேண்டாம் என சமீபத்தில் கூறப்பட்டதற்கு, பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கள் மறுக்கப்படுவதாக எதிர்ப்பு எழுந்தது. தற்போது பெண் டாக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றங்களை தடுக்கவும், பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்காமல் மாநில முதல்வரே, பெண்களுக்கு இரவு பணி வழங்க வேண்டாம் என கூறியுள்ளது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்வரின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ், குற்றவாளிகளுக்கு தாமதமின்றி உடனடியாக தண்டனை வழங்க வழிவகை செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-201923:31:17 IST Report Abuse
ஆப்பு இவருக்கு மூர்க்கமே தேவலாம்.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
02-டிச-201923:27:44 IST Report Abuse
Krishna Correct View By CM But ProWomen Fanaticists Will Always Blame Men Arrest-Prosecute Such Fanaticists
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
02-டிச-201922:41:43 IST Report Abuse
Nallavan Nallavan இரவுப்பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களை பாதுகாக்க என்ன படை செயல்படும் ? காவல்துறையில் அதற்கு மனிதவளம் இல்லை ..... அந்தந்த தனியார் நிறுவனங்களே ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும் என்கிற திட்டம் இருபதாண்டுகளுக்கு முன்பே முயற்சி செய்யப்பட்டு அதிலும் பல ஓட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன ...... இவற்றுக்கு மேலாக பெண்களுக்கு இரவுப்பணியிலிருந்தே விலக்கு என்பது சாலச்சிறந்தது அல்லவா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X