ஆத்தூர்: வலசக்கல்பட்டி ஏரி சேதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர்: வலசக்கல்பட்டி ஏரி சேதம்

Added : டிச 02, 2019
ஆத்தூர், வலசக்கல்பட்டி, ஏரி, சேதம்

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, கெங்கவல்லி ஒன்றியம், வலசக்கல்பட்டியில், 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. நேற்று முன்தினம் (நவ.,30) இரவு, நாமக்கல், கொல்லிமலையில் கன மழை பெய்ததால், வலசக்கல்பட்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது வருகிறது. ஏரி நிரம்பி வழியும் கான்கிரீட் தளம் 10 மீட்டர் தூரத்திற்கு சேதமடைந்ததால், ஏரியின் ஒரு பகுதி உடையும் அபாயம் உள்ளது. வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, பொதுமக்கள் செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X