மேட்டுப்பாளையம்; மருத்துவமனை முன் தடியடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையம்; மருத்துவமனை முன் தடியடி

Added : டிச 02, 2019
மேட்டுப்பாளையம்,  அரசு,  மருத்துவமனை, தடியடி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
மேட்டுப்பாளையம் நடூரில் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சுற்று சுவர் அமைத்த துணிக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு மருத்துவமனை வளாகம் அருகே இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து மறியல் செய்தனர். இவர்களுடன் பேச்சு நடத்தியும் பலன் இல்லை. தொடர்ந்து போலீசாருக்கும், அங்கு கூடி இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X