பொது செய்தி

இந்தியா

கேரள கன்னியாஸ்திரியின் 'கர்த்தாவின்டே நாமத்தில்'

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (68)
Advertisement
kerala,கேரளா,கன்னியாஸ்திரி,கர்த்தாவின்டே நாமத்தில்,பாதிரியார்,பாலியல் புகார்,லுாசி கோலப்புரா, லுாசி

திருவனந்தபுரம்: கிறிஸ்தவ பாதிரியார் மீது பாலியல் புகார் கூறிய கேரள கன்னியாஸ்திரி லுாசி கோலப்புரா குறித்த, 'கர்த்தாவின்டே நாமத்தில்' என்ற புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பாலியல் புகார்:


கேரளாவிலுள்ள சர்ச்சில் பணியாற்றிய, கிறிஸ்துவ பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கூறினார். பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி, கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி லுாசி கோலப்புரா மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கன்னியாஸ்திரி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர், 'பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை'யிலிருந்தும் நீக்கப்பட்டார். இதனையடுத்து போப்பிடம் தன் நிலையை விளக்க அனுமதி கேட்டு, லூசி கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், லூசியின் வாழ்க்கை குறித்து, 'கர்த்தாவின்டே நாமத்தில்' என்ற தலைப்பில், பத்திரிக்கையாளர் ராமதாஸ் என்பவர் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இது அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், புத்தகத்தில் லூசி கடந்து வந்த வலிகள் அதில் விவரிக்கப்பட்டுள்ளது.


கர்ப்பம்:


புத்தகத்தில் கன்னியாஸ்திரி கூறியிருப்பதாவது: கேரளாவில் கன்னியாஸ்திரி மடத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளை தங்களது ஆசைக்கு பணிய வைக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியார் ஒருவரால் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றார். இச்சம்பவத்திற்கு கன்னியாஸ்திரியை மடத்திலிருந்து வெளியே அனுப்பினார்கள்; பாதிரியாரை சபை காப்பாற்றியது.






4 முறை முயற்சி:


நான் கன்னியாஸ்திரி ஆன பிறகு, பார்வையாளர் என்ற போர்வையில் மடத்திற்குள் நுழைந்த பாதிரியார்கள், 4 முறை என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். கண்ணூர் அருகே கொட்டியூரில் சிறுமி ஒருவரை ராபின் என்ற பாதிரியார் கர்ப்பமாக்கினார். அந்த பாதிரியாருக்கு, கேரளாவின் பல்வேறு மடங்களிலுள்ள கன்னியாஸ்திரிகளுக்கு தொடர்பு உள்ளது. என்னையும் அவர் வலையில் சிக்க வைக்க முயற்சித்தார். இவ்வாறு அவர் கூறியதாக புத்தகத்தில் பல திடுக்கிடும் சம்பங்கள் உள்ளன. புத்தகம் வெளியானால் அது மேலும் பரபரப்பை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Wilfred Sahayaraja - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-201910:39:19 IST Report Abuse
Arul Wilfred Sahayaraja இதே விஷயம் தமிழகத்திலும் நடக்கிறது. ஒத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரே தீர்வு இவர்களெல்லாம் முறைப்படி திருமணம் செய்து கொள்வதே. ஆண்டவனை முன்பு நிறுத்தி விட்டு பின்னால் இருந்து கொண்டு தவறு செய்வதெல்லாம் எந்த மாதமாக இருந்தாலும் ஒத்துக்கொள்ள முடியாது
Rate this:
Share this comment
Cancel
03-டிச-201910:31:30 IST Report Abuse
பச்சையப்பன் இந்த கன்னியா திரியை யாரோ தூண்டி விடுகிறார்கள். கிறுக்குத்துவத்தின் மேல் சேற்றை வாரி இறைக்கும் கூட்டத்தின் பிடியில் சிக்கி விட்டார்.டாவின்சி கோட் திரைப்படம் தடை செய்யப் பட்டது போல் இந்த புத்தகத்தையும் உடணடியாக தடை செய்ய வேண்டும் பினரயி இதைச் செய்யாவிடில் அடுத்த தேர்தலில் தோல்வியடைவார்
Rate this:
Share this comment
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
04-டிச-201912:55:38 IST Report Abuse
R MURALIDHARANஎன்ன சாமியார்கள் செய்தால் அதை அரசியல்வாதிகள் பெரிதாக்கி விடுவார்கள் அதுவே பாதிரி செய்தால் சும்மா இருப்பார்கள். ஏனெனில் ஒட்டு வாங்கி. ப்ரோட்டஸ்டடென்ட் என்கிற மதம் உருவாவதற்கு காரணமே இந்த பாதிரிகள் செய்த அட்டூழியத்தால்தான்...
Rate this:
Share this comment
Cancel
shoba -  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-201910:18:09 IST Report Abuse
shoba Nithiya minja mudiyadhu...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X