ஊழியர்களின் சம்பள உயர்வு விகிதம் ; 2020 ல் இந்தியா டாப்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி : வெளிநாட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2020 ஆம் ஆண்டு ஆசியாவிலேயே இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் 9.2 சதவீதம் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.latest tamil newsகோர்ன் பெர்ரி என்ற நிறுவனம் சுமார் 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், எந்த நாடுகளில் ஊழியர்களுக்கு பணிக்கு ஏற்ப சம்பள உயர்வு இருக்கும் என்ற கூடுதல் தகவலும் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.


latest tamil news
இந்தியா தான் டாப்


அந்த ஆய்வில், இந்தியாவில் ஊழியர்களின் சம்பள வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருந்தது. இது அடுத்த ஆண்டு ( 2020) ல் 9.2 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டில் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பணவீக்கத்தை சரிசெய்து ஒப்பிட்டு பார்த்தால் உண்மையான சம்பளம் என்பது 2020 ல் 5 சதவீதமாக மாற வாயப்பு உள்ளது. ஆசியாவிலேயே இ்நதியாவில் தான் சம்பள உயர்வு அதிக அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. பல துறைகளில் ஊழியர்களின் நம்பிக்கை உணர்வும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.


latest tamil news
பணவீக்கம் அதிகரிப்பு


உலகளவில் சம்பள உயர்வு என்பது 2020 ஆம் ஆண்டை பொறுத்தவரை சுமார் 4.9 சதவீதமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. உலகளாவிய பணவீக்கம் 2.8 சதவீதமாக உள்ளது. அதை சரிசெய்தால் ஊழியர்களின் சராசரி சம்பள உயர்வு 2.1 சதவீதமாக இருகும் என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


மற்ற நாடுகள்


இ்நதியாவை தவிர ஆசியாவின் மற்ற நாடகளை ஒப்பிட்டு பார்த்தால் சம்பள வளர்ச்சி விகிதம் முறைப்படியே,
* இந்தோனேசியா - 8.1 சதவீதம்
* மலேசியா - 5 சதவீதம்
* சீனா -6 சதவீதம்
* தென்கொரியா - 4.1 சதவீதம்


latest tamil newsஇதனையடுத்து ஜப்பான் மற்றும் தைவான் நாடுகளில் ஊழியர்களின் சம்பள வளர்ச்சி விகிதம் குறைந்த அளவில் உள்ளது.
* தைவான் - 3.9 சதவீதம்
* ஜப்பான் - 2 சதவீதம்

ஒவ்வொரு நாடுகளிலும் வளர்ச்சி விகிதம் இந்த விகிதமுறையில் இருக்ககூடும் என்று கோன் பெர்ரி நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-டிச-201905:02:33 IST Report Abuse
Mani . V அப்படியா? ஆனா, விலைவாசி பலப்பல மடங்கு உயர்ந்திருக்குமே ஏன் அதைப்பற்றி சொல்லவில்லை?
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-டிச-201908:43:03 IST Report Abuse
ஆரூர் ரங்ஏன் இந்தக் கற்பனைப்பொய்? பணவீக்கம் வெறும் 4.62% விலைவாசிப்புள்ளி அதலபாதாளத்தில் அதாவது0.16 % மட்டுமே உயர்ந்துள்ளது ( Wholesale prices in India rose by 0.16 percent year-on-year in October of 2019, slowing from a 0.33 percent gain in the previous month and compared with market expectations of a flat reading. It was the lowest wholesale inflation rate since a decline in June 2016 ) ம.மோஹன் காலத்தில் பத்து சதவீதம்வரை உயர்ந்தபோது என்ன செய்தீர்??...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-டிச-201923:20:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எல்லாம் எதிர்காலத்தில் தான்.. இன்றும் 15 நாளில் மறந்துடுவானுங்கல்லே.. அந்த தைரியம் தான் மோசடி குரூப்புக்கு. எதையாவது புளுகி காலத்தை ஓட்றானுங்க.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-டிச-201923:17:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இப்போ 2019 நடக்குதுன்னு மோசடி குரூப்புக்கு யாராவது சொல்றீங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X