பொது செய்தி

தமிழ்நாடு

காலை பிடித்து கை கொடுத்த ரஜினி; நெகிழ்ச்சியில் பிரணவ்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (33)
Advertisement
Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,Pravan,Thalaivar

சென்னை: மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவுடனான சந்திப்பின் போது, அவரது காலை பிடித்து கைகொடுத்து, நடிகர் ரஜினிகாந்த் அவரை நெகிழ வைத்தார்.





கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், காலால் ஓவியம் வரைந்து தன்னம்பிக்கையின் நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம், கேரளாவில், பேரிடர் நிவாரண நிதி அளிக்க, முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த போது, தனது காலால் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். இது வைரலாக, பிரணவ் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.





ரஜினி இதற்கு சம்மதம் தெரிவித்து 20 நிமிடம் நேரம் ஒதுக்கினார். இந்நிலையில், சென்னை போயஸ் இல்லத்தில், ரஜினி - பிரணவ் சந்திப்பு இன்று நடந்தது. சந்திப்பின் போது, பிரணவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற ரஜினி, பிரணவின் காலை, தனது கைகளால் குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அவரை நெகிழ வைத்தார். தனது காலால் வரைந்த ரஜினியின் புகைப்படத்தை, அன்பளிப்பாக வழங்கிய பிரணவ், ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.




Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
03-டிச-201913:12:06 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை தமிழ்நாட்டில் உள்ள எத்தனை மாற்று திறனாளிகளை இதுவரை இவர் சந்தித்திருக்கிறார். தமிழன்னா பார்க்க மாட்டாரு.
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
03-டிச-201910:21:19 IST Report Abuse
kowsik Rishi பிரணவ் - ப்ரணமாம்
Rate this:
Share this comment
Cancel
Raja Manakavalan - Coimbatore,இந்தியா
03-டிச-201909:54:28 IST Report Abuse
Raja Manakavalan அபாரமான கதையமைப்பு.. அட்டகாசமான நடிப்பு.. இப்பொழுதுதான் மனிதாபிமானம் பொங்கி வழிகிறது.. இத்தனை நாள் எங்கு போயிருந்தது? ஏமாற மக்கள் முட்டாள்கள் இல்லை.
Rate this:
Share this comment
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
03-டிச-201912:11:57 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஏமாறாதீங்க...நீங்கள் அறிவுடன் மிக தெளிவுடன் தேர்ந்தெடுக்க வேண்டிய நபர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், TTV தினகரன், சின்னம்மா சசிகலா, சீமான், திருமா, வைக்கோ, G K வாசன் (ரஜினி தவிர வேறுயாராவது இருக்கீங்களாப்பா முதல்வர் பதவிக்கு? பெயர் சேக்கணும் ) ஓட்ட பந்தயத்தில் ஓடுபவருக்குத்தான் கப்பு வேடிக்கை பார்ப்பவருக்கல்ல.. முதல்வர் வேட்பாளருக்கு நிற்பவரைதான் முதல்வராக்க முடியும்.. அதனால் இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் ..ஏமாறாதவர் நாங்கள் என சொல்லுங்கள் .....வாழ்த்துக்கள்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X