காலை பிடித்து கை கொடுத்த ரஜினி; நெகிழ்ச்சியில் பிரணவ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காலை பிடித்து கை கொடுத்த ரஜினி; நெகிழ்ச்சியில் பிரணவ்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (33)
Share
Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,Pravan,Thalaivar

சென்னை: மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவுடனான சந்திப்பின் போது, அவரது காலை பிடித்து கைகொடுத்து, நடிகர் ரஜினிகாந்த் அவரை நெகிழ வைத்தார்.


latest tamil newsகேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், காலால் ஓவியம் வரைந்து தன்னம்பிக்கையின் நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம், கேரளாவில், பேரிடர் நிவாரண நிதி அளிக்க, முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த போது, தனது காலால் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். இது வைரலாக, பிரணவ் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.


latest tamil newsரஜினி இதற்கு சம்மதம் தெரிவித்து 20 நிமிடம் நேரம் ஒதுக்கினார். இந்நிலையில், சென்னை போயஸ் இல்லத்தில், ரஜினி - பிரணவ் சந்திப்பு இன்று நடந்தது. சந்திப்பின் போது, பிரணவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற ரஜினி, பிரணவின் காலை, தனது கைகளால் குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அவரை நெகிழ வைத்தார். தனது காலால் வரைந்த ரஜினியின் புகைப்படத்தை, அன்பளிப்பாக வழங்கிய பிரணவ், ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


latest tamil news


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X