கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் குவிக்கப்படும் குப்பை

Added : டிச 02, 2019
Advertisement

கும்மிடிப்பூண்டி : கலெக்டர் எச்சரித்தும், கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில், மலை போல் குப்பை குவிக்கப்பட்டு வருகிறது.

கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமான, தாமரை ஏரி, 48 ஏக்கர் பரப்பு உடையது.பொதுப்பணித் துறை - நீர் ஆதாரம் - பராமரிப்பில் உள்ள இந்த ஏரியில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், பல ஆண்டு களாக, குப்பையை குவித்து வருகிறது.மேலும், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியினர், வீடுகளில் கழிவு நீரை வெளியேற்றி, ஏரியில் கலக்க விடுகின்றனர்இது குறித்து எழுந்த புகாரையடுத்து, ஜூன், 26ல், திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி, ஏரியை பார்வையிட்டார்.

'ஏரிக்குள், பேரூராட்சி நிர்வாகம், குப்பை குவிக்க கூடாது; குவித்த குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்' என, துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.சம்பந்தப்பட்ட அரசு துறையினர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குப்பை குவிப்பதும், கழிவு நீரை திறந்து விடுவதும் தொடர்கிறது.

நீர் நிலைகளை பாதுகாக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாவட்ட கலெக்டர் எச்சரித்தும், அரசு துறை அலுவலர்களின் அலட்சியப்போக்கால், கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரம், அழிவை நோக்கி செல்வதைக் கண்டு, இயற்கை ஆர்வலர்கள் வேதனை அடைகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X