குண்டும், குழியுமான சீத்தஞ்சேரி சாலை

Added : டிச 02, 2019
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : குண்டும், குழியுமான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், விழுந்து காயம் அடைவதால், அதை சீர்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வெங்கல் கிராமத்தில் இருந்து, சீத்தஞ்சேரி செல்லும் சாலை உள்ளது. திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை வழியே, மாளந்துார், மெய்யூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர்.அதிகளவு இரு

ஊத்துக்கோட்டை : குண்டும், குழியுமான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், விழுந்து காயம் அடைவதால், அதை சீர்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெங்கல் கிராமத்தில் இருந்து, சீத்தஞ்சேரி செல்லும் சாலை உள்ளது. திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை வழியே, மாளந்துார், மெய்யூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர்.அதிகளவு இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இச்சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது.இதனால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் தெரியாமல் அதில் விழுந்து காயம் அடைகின்றனர்.

இது குறித்து, இப்பகுதி மக்கள் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திருவள்ளூர் கலெக்டர், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, வெங்கல்- - சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையை சீர்படுத்த வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X