நெடுஞ்சாலையில் வெள்ளம் வாகன போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 02, 2019
Advertisement

போளிவாக்கம் : போளிவாக்கம் பகுதியில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், தொடர் மழை பெய்து வருகிறது. இதைெயாட்டி கிராமங்களில் ஏரி கலங்கல்கள், குட்டைகள் உட்பட அனைத்து நீராதாரங்களும் நிரம்பி வருகின்றன.இதையடுத்து, போளிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில்உள்ள நீர் ஆதாரங்கள் நிரம்பி, உபரிநீர் கால்வாய் வழியாக பிற ஏரிகளுக்கு செல்கிறது.இந்நிலையில் போளிவாக்கம் மறறும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், நீர் ஆதாரங்கள் நிரம்பி கால்வாய் வழியாக போளிவாக்கம் ஏரிக்கு வந்ததால், திருவள்ளூர் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், போளிவாக்கம் அருகே கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், ஒன்றரை அடி உயர்த்துக்கு வெள்ளநீர் சென்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில், இருசக்கர வாகனம் மற்றும் இலகுரக வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.மேலும், கார் போன்ற இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றோர், மேல்நல்லாத்துார் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு, கம்மவார்பாளையம், நுங்கம்பாக்கம், எறையாமங்கலம் ஆகிய கிராமங்கள் வழியாக, மப்பேடு கூட்டு சாலைக்கு சென்று, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வகையில் திருப்பி அனுப்பி விடப்பட்டனர்.

இதையடுத்து, நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாரும், சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்தை சீரமைத்தனர்.சாலையில் நீர் வற்றிய பின், போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள போளிவாக்கம் ஏரியை முறையாக துார்வாராததே, நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X