பொது செய்தி

தமிழ்நாடு

'சிசிடிவி' பொருத்த போலீசார் அறிவுரை

Added : டிச 02, 2019
Advertisement

கடம்பத்துார் : கடம்பத்துார் பகுதி யில், நெடுஞ்சாலையோரம் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் -- பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது கடம்பத்துார். இப்பகுதி வழியே அரசு மற்றும் தனியார் பஸ், தொழிற்சாலை, கல்லுாரி பஸ், கனரக வாகனங்கள் என, 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில், நெடுஞ்சாலையோரம் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் உட்பட கடைகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, கடம்பத்துார் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், எஸ்.பி., அரவிந்தன் மற்றும் கூடுதல் எஸ்.பி., சிலம்பரசன் ஆகியோர் உத்தரவின்படி, இப்பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த, நேரில் சென்று அறிவுறுத்தி வருகிறோம் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X