பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணியில் 10ல் கார்த்திகை தீபம்

Added : டிச 02, 2019
Advertisement

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 10ம் தேதி, கார்த்திகை மாத கிருத்திகை விழாவையொட்டி, மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. காலை, 10:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வலம் வரும்.அப்போது, மலைக்கோவில் எதிரே உள்ள, பச்சரிசி மலையில் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, மாடவீதியில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி வைக்கப்படும்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருத்தணி: திருத்தணி வட்டார வள மையத்தின் சார்பில், திருத்தணி கல்வி மாவட்ட அளவில், உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான நிஷ்தா பயிற்சி, ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரியில் நேற்று துவங்கியது.மாவட்ட கல்வி ஆய்வாளர் வெங்கடேசுவரலு பயிற்சியை துவக்கி வைத்தார். திருத்தணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரஸ்வதி வரவேற்றார். இதில், திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் இருந்து, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர்கள், திருத்தணி வட்டார வளமைய பயிற்றுனர்கள் பங்கேற்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி, ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X