பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர் பணியிடம் நியமனம்

Added : டிச 02, 2019
Advertisement

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்தில், எட்டு ஊராட்சி செயலர்கள் பணியிடம் காலியாக இருந்த நிலையில், ஐந்து ஊராட்சிகளில் செயலர் பணியிடம் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

கடம்பத்துார் ஒன்றியத்தில், 43 ஊராட்சிகள் உள்ளன. இதில், செஞ்சி, கடம்பத்துார், ஏகாட்டூர், வெள்ளேரிதாங்கல், பாப்பரம்பாக்கம், கொட்டையூர், திருப்பந்தியூர் மற்றும் கூவம் ஆகிய, எட்டு ஊராட்சிகளில், ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக இருந்தது.

இந்நிலையில், கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தினர், கடம்பத்துார், பாப்பரம்பாக்கம், ஏகாட்டூர், கொட்டையூர், செஞ்சி ஆகிய ஐந்து ஊராட்சிகளில், செயலர்கள் நியமிக்கப்பட்டு, அதற்கான அரசு உத்தரவை, வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலர்களிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட ஊராட்சி செயலர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் பதவி ஏற்றுக் கொண்டனர்.மேலும், மீதமுள்ள வெள்ளேரிதாங்கல், திருப்பந்தியூர், கூவம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் காலியாக உள்ள செயலர் பணியிடங்களை நியமிக்க, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X