சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

நிலமும் விவசாயமும் தான் நம்மை காப்பாற்றும்!

Updated : டிச 03, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
தான் படித்த, பயோ டெக்னாலஜி படிப்புக்கு, தகுந்த வேலை கிடைக்காததால், களைக் கொத்தி யும், மண்வெட்டியுமாக விவசாயத்தில் இறங்கியுள்ள குறிஞ்சிமலர், 22: திருச்சி மாவட்டம், கல்லணை அருகே உள்ள, பாதிரக்குடி தான் பூர்வீகம். அப்பா, சபாபதி, பி.இ., கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறார். எனினும், அவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், கிடைத்த வேலைகளைப் பார்த்து வருகிறார்.நான்
 நிலமும் விவசாயமும் தான் நம்மை காப்பாற்றும்!

தான் படித்த, பயோ டெக்னாலஜி படிப்புக்கு, தகுந்த வேலை கிடைக்காததால், களைக் கொத்தி யும், மண்வெட்டியுமாக விவசாயத்தில் இறங்கியுள்ள குறிஞ்சிமலர், 22: திருச்சி மாவட்டம், கல்லணை அருகே உள்ள, பாதிரக்குடி தான் பூர்வீகம். அப்பா, சபாபதி, பி.இ., கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறார். எனினும், அவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், கிடைத்த வேலைகளைப் பார்த்து வருகிறார்.

நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. லால்குடி லயன்ஸ் பள்ளியில் தான், எல்.கே.ஜி., முதல், 10ம் வகுப்பு வரை படித்தேன். சென்னை, தண்டையார்பேட்டை சவுந்தரபாண்டி - சுப்பம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 முடித்து, சென்னை அருகே உள்ள இன்ஜினி யரிங் கல்லுாரியில், பயோ டெக்னாலஜி படித்து, ெவளியே வந்தேன்.உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகளில் வேலைக்கு அலைந்தேன். '6,000 ரூபாய் தருகிறோம்; 7,000 ரூபாய் தருகிறேன்' என்றனர். நான்கு ஆண்டு கள் கஷ்டப்பட்டு படித்து, இவ்வளவு குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்ப்பதா என, மன வேதனை அடைந்தேன்.

அப்போது தான், விவசாயம் செய்தால் என்ன என எண்ணி, கிராமத்திற்கு வந்து விட்டேன். என் அத்தை வசம் இருந்த, 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தேன். மரம் வளர்ப்பு முறைகளை பிரபலப்படுத்தி வரும், 'குமிழ்' சண்முக சுந்தரம் தொடர்பு கிடைத்தது.அவர் அறிவுரைப்படி, தேக்கு மரக்கன்றுகளை நட்டுள்ளேன். வளர்ந்ததும், ஊடுபயிராக, பிற பணப் பயிர்களை சாகுபடி செய்யலாம் என நினைக்கிறேன். நான்கைந்து மாதங்களில், 4 - 5 அடி உயரத்திற்கு, கன்றுகள் வளர்ந்து விடும். ஒரு வருஷத்தில், 7 - 8 அடி உயரத்திற்கு வளர்ந்து விடும்.

அப்போது, பருவத்திற்கு ஏற்ப, தர்பூசணி, வெள்ளரி, நிலக்கடலை போன்றவற்றை சாகுபடி செய்ய திட்டமிட்டு உள்ளேன். தேக்கு மரம், அதுபாட்டுக்கு வளர்ந்தபடி இருக்கும். 10 - 15 ஆண்டுகளில், பலன் கொடுக்க துவங்கி விடும். அப்போது, மிகப் பெரிய பணப் பலன்கள் கிடைக்கும்.

'இவ்வளவு செலவு செய்து, நான்கைந்து ஆண்டுகள் படித்தும், சாதாரண விவசாயி போல, தினமும் வயலுக்கு சென்று வருகிறாயே...' என, பெற்றோர் கூறத் தான் செய்கின்றனர். எனினும், படித்த படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்காத நிலையில், நம் கையில் உள்ள விவசாயத்தை மேற்கொள்ளலாமே என, துணிந்து இறங்கி விட்டேன். எனினும், நல்ல அரசு வேலை கிடைத்தால், பார்ப்பேன். அப்போதும், விவசாயத்தை கைவிடப் போவதில்லை. நிலமும், விவசாயமும் தான், நம்மை காப்பாற்றும் என்பதில், உறுதியாக இருக்கிறேன்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
03-டிச-201919:17:52 IST Report Abuse
Gopi you should have joined as a trainee not bothering about the initial pay. gaining knowledge is more important in a field than expecting huge sum as salary
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
03-டிச-201911:45:35 IST Report Abuse
Krishna Very Good Start I Can Also Help You In Agro AH General Matters
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X