பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கேபிள், 'டிவி'யில் பழசு தான்; இப்போ புதுசு!

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை: 'தற்போதைக்கு புதிதாக, 'செட் - டாப் பாக்ஸ்'கள் கொள்முதல் செய்யும் திட்டம் ஏதும் இல்லை' என, அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும், விரும்பிய சேனல்களுக்கு மக்கள் மாறும் முறை, பிப்ரவரியில் அறிமுகமானது. தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி'க்கு, 30 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சேவை வழங்க, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கேபிள் ஆப்பரேட்டர்கள் செயல்படுகின்றனர்.புதிய கட்டண முறை அமலுக்கு வந்த போது, அரசு கேபிள், 'டிவி' கட்டணம் அதிகமாக இருந்தது. இதனால், பல லட்சம் வாடிக்கையாளர்கள், தனியார் கேபிள், 'டிவி'க்கும், டி.டி.எச்., சேவைக்கும் மாறினர். கட்டணம், 130 ரூபாயாக குறைத்ததும், வாடிக்கையாளர்கள், அரசு கேபிள், 'டிவி'க்கு மீண்டும் வர துவங்கினர். அவர்களுக்கு வழங்க, செட் - டாப் பாக்ஸ்கள் இல்லாத நிலையில், புதிதாக, செட் - டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்யும் எண்ணம் இல்லை என, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது: மாத கட்டணத்தை, 130 ரூபாயாக குறைத்த பின், கேபிள், 'டிவி' சேவை கேட்டு, வாடிக்கையாளர்கள் மீண்டும் வருகின்றனர். அவர்களுக்கு, செயல் இழந்த செட் - டாப் பாக்ஸ்களை, ஆப்பரேட்டர்களிடம் இருந்து வாங்கி, சரி செய்து வழங்குகிறோம்.இதற்காக, தங்களிடம் உள்ள செயல் இழந்த பாக்ஸ்களை வழங்கும்படி, ஆப்பரேட்டர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம். இதுவரை, 2 லட்சம் பாக்ஸ்கள் சரி செய்து வழங்கப் பட்டுள்ளன. தற்போது மீண்டும், புதிய செட் - டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்யும் எண்ணம் இல்லை. தேவையெனில், அதற்கேற்றவாறு முடிவு செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X