நீதிபதி ராமகிருஷ்ணன் பொறுப்பேற்பு 9ல் செயல்பட துவங்குது தீர்ப்பாயம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீதிபதி ராமகிருஷ்ணன் பொறுப்பேற்பு 9ல் செயல்பட துவங்குது தீர்ப்பாயம்

Added : டிச 02, 2019
Share
சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு நீதிபதியாக, ராமகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றார். நீதிபதி நியமனத்தை அடுத்து, டிசம்பர், 9 முதல் தீர்ப்பாயம் செயல்பட துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, 2010ல், டில்லியில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், முதன்மை அமர்வு துவக்கப்பட்டது. தென் மாநிலங்களுக்கான அமர்வு, 2012ல், சென்னையில்

சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு நீதிபதியாக, ராமகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றார்.

நீதிபதி நியமனத்தை அடுத்து, டிசம்பர், 9 முதல் தீர்ப்பாயம் செயல்பட துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, 2010ல், டில்லியில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், முதன்மை அமர்வு துவக்கப்பட்டது. தென் மாநிலங்களுக்கான அமர்வு, 2012ல், சென்னையில் துவங்கியது. இந்த அமர்வில் இருந்த நீதிபதியும், உறுப்பினரும், 2018ல் ஓய்வு பெற்றனர். பின், சில வழக்குகள், டில்லியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரிக்கப்பட்டன. பல வழக்குகள் விசாரணைக்கு வராமல் முடங்கின.

இந்நிலையில், தென்மண்டல அமர்விற்கு நீதிபதியாக கே.ராமகிருஷ்ணனும், உறுப்பினராக சாய்பால் தாஸ்குப்தாவும் நியமிக்கப்பட்டனர். இவர்களில், நீதிபதி ராமகிருஷ்ணன், நேற்று பொறுப்பேற்றார். உறுப்பினர், விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.இதற்கிடையில், தென்மண்டல அமர்வில், வரும், 9ம் தேதி முதல் வழக்குகள் விசாரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும், அடுத்த நாளிலும் சிறப்பு நிகழ்வாக, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல், தென்மண்டல அமர்வில் வழக்குளை விசாரிக்க உள்ளார். அந்த இரண்டு நாட்கள் மட்டும், மூன்று பேர் அமர்வாக செயல்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X