பங்கஜா முண்டே விலகல்? பா.ஜ.,வில் பரபரப்பு| Dinamalar

பங்கஜா முண்டே விலகல்? பா.ஜ.,வில் பரபரப்பு

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (15)
pankaja munde,B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,பங்கஜா, விலகல்

மும்பை: பா.ஜ.,வின் பங்கஜா முண்டே, கட்சியிலிருந்து விலகியதாக வதந்தி பரவியதால், அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான பங்கஜா முண்டே, கட்சியிலிருந்து விலகி விட்டதாக, இன்று (டிச.,2) வதந்தி பரவியது. தன் சமூக வலைதள பக்கத்தில் இருந்து, பா.ஜ., என்ற வார்த்தையை அவர் நீக்கியதால், இந்த வதந்தி பரவியது.





இது குறித்து, மஹாராஷ்டிரா மாநில, பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், ''பங்கஜா, கட்சியிலிருந்து விலகவில்லை. சட்டசபை தேர்தலில், தன் தோல்விக்கான காரணம் குறித்து, அவர் ஆய்வு செய்து வருகிறார்,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X