காஞ்சிபுரம் : களக்காட்டூர் கால்நடை மருத்துவமனை நுழைவாயிலில், சமீபத்திய மழையால் சகதியாகி, விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இங்கு குருவிமலை, நத்தாநல்லுார், வேடல் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கால்நடை விவசாயிகள், நோய் தாக்கிய ஆடு, மாடுகளை சிகிச்சைக்காக இழுத்து வருகின்றனர். மழைக்காலங்களில் மருத்துவமனை நுழைவாயில், சகதியாக மாறுகிறது. இதனால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.களக்காட்டூர் கால்நடை மருத்துவமனைக்கு செல்ல பாதை அமைத்து, நுழைவாயிலில், மழைநீர் தேங்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.