பொது செய்தி

தமிழ்நாடு

மணிமங்கலம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்

Added : டிச 02, 2019
Advertisement

படப்பை : மணிமங்கலம் ஏரி கன மழையால் கிடுகிடுவென நிரம்பியதையடுத்து, ஐந்து கலங்கல் வழியே, உபரி நீர் வெளியேறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே, மணிமங்கலம் ஏரி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஏரியாக விளங்கும் மணிமங்கலம் ஏரி, 1,800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார் வாரப் பட்ட இந்த ஏரியில், 850 கோடி லிட்டர் நீரை தேக்கி வைக்க முடியும். 18.5 அடி உயரம் உடையது. பருவமழைக்கு முன், இந்த ஏரியின் வரத்து கால்வாய்கள் துார்வாரி அகலப்படுத்தப்பட்டு இருந்தது.இதனால், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் இந்த ஏரி கிடுகிடுவென நிரம்பியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று பகல் வரை, கன மழை பெய்தது. இதனால், இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது.ஏரியில் உள்ள ஐந்து கலங்கல் வழியே உபரி நீர் வெளியேறுகிறது. நேற்று முன்தினம், ஞாயிறு விடுமுறை என்பதால், பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று கலங்கல் நீரில் ஆபத்தான முறையில் குளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X