அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிவாரண உதவிகள்: ராமதாஸ் வலியுறுத்தல்

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை: 'மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தேவையான நிவராண உதவிகளை, அரசு விரைந்து வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில், சில நாட்களாக, வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மிகுந்த கவலை அளிக்கிறது.தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி, மழையால் பல்வேறு இடங்களில், பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர், கடலுார், துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், மழை பாதிப்பின் தீவிரமும், அளவும் அதிகமாக உள்ளன.மழையால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க, கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தேவையான நிவராண உதவிகளையும், அரசு விரைந்து வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

ரூ.10 லட்சம் இழப்பீடு
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கைகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த, நடூர் கிராமத்தில், அடுத்தடுத்து, பல வீடுகள் இடிந்து விழுந்ததில், 10 பெண்கள், 2 குழந்தைள் உட்பட, 17 பேர் உயிரிழந்திருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. இவர்கள் தவிர, காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும், மழை சார்ந்த விபத்துகளில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, குறைந்தது தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X