பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி ஷட்டரை திறந்தால் கரை உடைப்பை தடுக்க முடியுமா?

Added : டிச 02, 2019
Advertisement

வாலாஜாபாத் : ஏரி கலங்கல் ஷட்டரை திறந்தால், ஏரி கரை உடைப்பை தடுக்க முடியுமா என, சமூக ஆர்வலர்களிடையே பல கேள்விகள் எழுந்து உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணி துறை மற்றும் ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில், 1,942 ஏரிகள் உள்ளன. தென் மேற்கு பருவ மழை மற்றும் வட கிழக்கு பருவ மழையால், பல ஏரிகள் நிரம்பி வருகின்றன.இதில், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய வட்டாரங்களில் இருக்கும் சில ஏரிக்கரைகள் உடைப்பெடுத்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், பல ஏரிக்கரை உடைப்பெடுப்பதை தடுக்கும் வகையில், விவசாயிகள் சிலர், கலங்கல் ஷட்டரை திறக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, பரந்துார் ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது. கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறியது. கூடுதல் தண்ணீர் வரத்தால், ஏரிக்கரை உடையும் அபாயம் இருக்கிறது என, விவசாயிகள் சிலர், கலங்கல் ஷட்டரை திறக்க முயன்றனர். ஷட்டரை திறக்க முடியவில்லை.இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், ஏரி உடைப்பு தடுக்க முடியுமா என, சமூக ஆர்வலர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X