அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேலும் 4 மருத்துவ கல்லுாரிகள் முதல்வர் இ.பி.எஸ்., தகவல்

Added : டிச 02, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மேலும் 4 மருத்துவ கல்லுாரிகள்  முதல்வர் இ.பி.எஸ்., தகவல்

சென்னை: ''தமிழகத்தில், கூடுதலாக, நான்கு மருத்துவ கல்லுாரிகளுக்கு, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

தமிழக சுகாதார துறையில், மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக, 5,224, நர்ஸ்கள், கிராமபுற சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட, மருத்துவ பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கட்டமைப்புஅவர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பணி ஆணை வழங்கினர். முன்னதாக, தமிழக தொலைதுார கண்ணியல் வலைதளம் மற்றும், 32 காணொளி கண் பரிசோதனை மையங்களை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்து, கண் பரிசோதனை மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தேசிய அளவில், சுகாதார துறையில், தமிழகம் முன்னோடி மாநிலம். அரசு மருத்துவ கல்லுாரிகளில், எட்டு ஆண்டுகளில், 1,350 மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. வரலாற்று சாதனையாக, ஒரே ஆண்டில், ஒன்பது மருத்துவ கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்த, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், அரியலுார், கடலுார், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய, நான்கு மாவட்டங்களில், புதிதாக மருத்துவ கல்லுாரி அமைக்க, மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.அதற்கும் விரைவில், அனுமதி கிடைக்கும் என்ற, நம்பிக்கை உள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் சிறந்து விளங்குகிறது. தொடர்ந்து, 5வது ஆண்டாக, மத்திய அரசின் விருதை, தமிழகம் பெற்றுள்ளது.புதிதாக துவங்கப்பட உள்ள, ஒன்பது மருத்துவ கல்லுாரிகள் வாயிலாக, 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக, 2012ல் இருந்து இதுவரை, 27 ஆயிரத்து, 436 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். உயர்ந்த சிந்தனைசெவிலியர்களின் பணி மகத்தானது. மக்களுக்காகவே நாம் என்ற, உயர்ந்த சிந்தனையோடு சேவை ஆற்ற வேண்டும். தனியார் மருத்துவமனைகளை விட, அரசு மருத்துவமனைகளை மக்கள் விரும்பும் அளவிற்கு, செவிலியர்களின் பணி, சிறப்பாக அமைய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றனர்.நர்ஸ் ஆன திருநங்கை!நர்ஸ் பணியாணை பெற்றவர்களில், திருநங்கை அன்பு ரூபியும் ஒருவர். நாட்டிலேயே, முதல் திருநங்கை நர்ஸ் என்ற பெருமையை, அன்பு ரூபி பெற்றார்.

இதுகுறித்து, அன்பு ரூபி அளித்த பேட்டி:இந்தியாவின் முதல் திருநங்கை நர்ஸ் என்பதை, பெருமையாக கருதுகிறேன். இந்த பெருமையை, நான் அவ்வளவு சாதரணமாக பெறவில்லை. நுழைவு தேர்வு அனுமதி சீட்டில், மூன்றாம் பாலினத்தவர் என, குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அரசிதழில், ஆண், பெண் பாலினம் மட்டுமே இருந்தது. எனவே, பெண் பாலினத்தில் சேர்க்கப்பட்டேன். கடுமையான போட்டியில் தான், வெற்றி பெற்றேன். என் போன்றோர், வாழ்வில் வெற்றி பெற, மூன்றாம் பாலினத்தவருக்கு, அரசு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.***

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-டிச-201909:41:27 IST Report Abuse
Lion Drsekar கண்டிப்பாக தொடங்கினால்தான் நல்லது, கரைகளின் பொறியியல் கல்லூரிகளில் யாருமே இல்லையே பாவம்? மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகி விட்டது. விவசாய நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் என்னாகும்? மருத்துவ கல்லூரி ஆரம்பித்தால் மீண்டும் புத்துணர்ச்சி பெறலாம், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும், தரமான உணவு கிடைத்தாலே போதும் மருத்துவ மனைக்கு யாருமே செல்லவேண்டிய அவசியமே இல்லை? எல்லாவற்றிலும் கலப்படம், இதனை ஆண்டுகள் அந்த எண்ணை, இந்த எண்ணை என்று பல லட்சம் கோடி விளம்பரம் செய்தவர்கள் தற்போது பதுங்கி விட்டார்கள்? இதனை வியாதிகளுக்கும் அவர்கள்தான் காரணம் என்று தெரிந்தும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை, அதே போன்று மது அவ்வளவு கலப்படம், இதையும் யாரும் கேட்பதே இல்லை, காய்ச்சுவது எதிர்வரிசை, விற்பது அவர்களுக்கு எதிரி திசை இப்படியே போனால் வீட்டுக்கு ஒரு மருத்துவர் வந்தாலும் யாராலும் காப்பாற்ற முடியாது. வெளிநாடுகளைப்போல் முதலில் மக்கள் நலனில் கவனம் செலுத்தினால் நல்லது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X