அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மழை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்: வாசன்

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை: 'மழை பாதிப்பில் இருந்து, மக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க, தொடர் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து, மாநிலம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. மழை பாதிப்பில் இருந்து, மக்களை பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மழை காலத்தில் நோய் தாக்காமல், பரவாமல் இருக்க, சுகாதாரத் துறையின் தொடர் நடவடிக்கை மிகவும் அவசியம்.மேலும், தமிழக அரசு உள்ளாட்சி, தீயணைப்பு, காவல், சுகாதாரம், போக்குவரத்துறை, கால்நடை ஆகிய துறைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். சேவை பணிகளை, 24 மணி நேரமும் மேற்கொண்டு, மழையின் பாதிப்பில் இருந்து, குடிசை வாழ் மக்கள் உட்பட, ஒட்டு மொத்த மக்களையும், கால்நடைகளையும் பாதுகாத்திட, தொடர் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், தொடர்மழை காரணமாக, வீடுகள் சரிந்து விழுந்ததில், 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம், அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழக அரசு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, விரைந்து செயல்படுத்த வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X