பொது செய்தி

தமிழ்நாடு

பாலாறு, பக்கிங்ஹாமில் கரை புரண்டோடும் வெள்ளம்

Added : டிச 02, 2019
Advertisement
 பாலாறு, பக்கிங்ஹாமில் கரை புரண்டோடும் வெள்ளம்

மாமல்லபுரம் : இரு நாட்களாக பெய்த மழையால், பாலாறு, பக்கிங்ஹாம் கால்வாயில், வெள்ளம் பெருக்கெடுத்து, கரைபுரள்கிறது.

செங்கல்பட்டு மாவட்ட பகுதியில், இரு நாட்களாக, கனமழை பெய்தது. இதன் காரணமாக, பாலாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் ஏரிகளில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. பல பகுதிகளில், ஏரிகள் நிரம்பி, உபரிநீர், பாலாற்றில் பெருக்கெடுக்கிறது.கடலுார் - வாயலுார்; ஈசூர் - வல்லி புரம் இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில், தண்ணீர் நிரம்பியுள்ளது.

கடந்த, 2015 வரை, பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், நீரை தடுத்து தேக்க, தடுப்பணை இன்றி, கடலில் கலந்து வீணானது.தற்போது, தடுப்பணைகள் அமைந்ததால், அணை பகுதிகளில், மழை நீர், நீண்டதுாரத்திற்கு தேங்கி நிற்கிறது.நான்காண்டுகளுக்கு பின், வெள்ளம் பெருக்கெடுக்கும் நிலையில், அணை பகுதிகளில், முழு கொள்ளளவு நீர் தேங்கி, உபரிநீர் கடலில் கலக்கிறது.சென்னை புறநகர் பகுதிகளின் மழை வெள்ளம், பக்கிங்ஹாம் கால்வாயில் சேர்ந்து, கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X