பொது செய்தி

தமிழ்நாடு

உடையும் நிலையில் வேடந்தாங்கல் ஏரிக்கரை; மக்கள் முயற்சியால் சீரமைப்பு

Added : டிச 02, 2019
Advertisement

மதுராந்தகம் : வேடந்தாங்கலில், உடையும் நிலையில் இருந்த ஏரிக்கரையை, அதிகாரிகள் மற்றும் அப்பகுதியினர் ஒன்றிணைந்து, மண் கொட்டி பலப்படுத்தினர்.

மதுராந்தகம் ஒன்றியம், வேடந்தாங்கல் ஏரி, பறவைகளுக்கான சரணாலயமாக விளங்குகிறது.கடந்த வாரம் வரை, இந்த ஏரியில், ஓரளவு தண்ணீர் மட்டுமே சேகரமாகி இருந்தது. மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.இந்நிலையில், ஏரியின் ஒருபகுதி கரை பலவீனமாக இருந்ததால், நேற்று காலை, அதன் வழியாக தண்ணீர் வெளியேறியது.

இதையறிந்த அப்பகுதியினர், மதுராந்தகம் சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்திக்கு தகவல் அளித்தனர்.இதையடுத்து, எம்.எல்.ஏ., புகழேந்தி, மதுராந்தகம் ஒன்றிய பொதுப்பணித் துறை அதிகாரிகளோடு வந்து, வேடந்தாங்கல் கிராமவாசிகளோடு ஒன்றிணைந்து, ஏரிக்கரையில் மண் கொட்டி, கரையை பலப்படுத்தினர்.

ஏரிக்கரைக்கும், தரிசு நிலத்திற்கும் இடையே தண்ணீர் வந்ததால், அந்த தண்ணீரை கடந்து, பொதுமக்கள், சேதம் அடைந்த கரையை சீரமைத்தனர்.துரித நடவடிக்கையால் ஏரிக்கரை உடையாமல் பாதுகாக்கப்பட்டதாக, விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X