சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி வளாக பழைய கட்டடம் விழுந்தது

Added : டிச 02, 2019
Advertisement

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, கன மழையால், பள்ளி கட்டடம் விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

மதுராந்தகம் அடுத்த, லத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது தட்டாம்பேடு. இக்கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 81 மாணவர்கள் பயில்கின்றனர்.இப்பள்ளி வளாகத்தில், கைவிடப்பட்ட வகுப்பறை கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் அமர்ந்து, மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுவர் என, கூறப்படுகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக, நேற்று மதியம், 12:00 மணிக்கு, பயன்பாடு இல்லாத பள்ளி கட்டடத்தின் கூரை, முழுவதுமாக இடிந்து விழுந்தது. பள்ளிக்கு விடுமுறை என்பதால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. அதுவே, பள்ளி இயங்கி, மதிய உணவு இடைவேளையில், மாணவர்கள் அங்கு சாப்பிடும்போது இருந்திருந்தால், பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும்.

எனவே, மாவட்டம் முழுவதும், பள்ளி வளாகத்தில் உள்ள சேதமான கட்டடம், கட்டட கூரை குறித்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, முன் எச்சரிக்கையாக, அவற்றை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X