பொது செய்தி

தமிழ்நாடு

மேயர் இடஒதுக்கீட்டில் குழப்பம்: மாநில தேர்தல் ஆணையர்

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை: மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு, இன்னும் உறுதி செய்யப்படாததால், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி பதவிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில், 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தமாக, 12 ஆயிரத்து, 820 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நேரடி தேர்தல் நடக்க இருந்தது. சமீபத்தில், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.கவுன்சிலர்களால், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். உள்ளாட்சி தேர்தல், 2016ல் அறிவிக்கப்பட்டபோது, 12 மாநகராட்சிகள் இருந்தன; தற்போது, 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திண்டுக்கல், ஆவடி மாநகராட்சிகள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்காக, மூன்று நகராட்சிகளை, மாநகராட்சிகளாக அரசு தரம் உயர்த்தியுள்ளது. தேர்தல் நடத்த வேண்டும் என்றால், மாநகராட்சி பதவிகளில், 50 சதவீத இடங்களை, பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 18 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். 15 மாநகராட்சிகள் உள்ளதால், அவற்றை சமபங்காக பிரித்து, பெண்களுக்கு ஒதுக்க முடியாத சூழல் உள்ளது. இடஒதுக்கீடு அறிவிப்பதிலும், குழப்பம் உள்ளது.

எனவே தான், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், நேற்று அறிவிக்கப்படவில்லை.'நிர்வாக காரணங்களுக்காக, தேர்தல் அறிவிக்கவில்லை' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, இதை தான் மறைமுகமாக கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் முடிவு, அரசின் கையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X