தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம்: கலெக்டர்களுக்கு ஆணையம் சுற்றறிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம்: கலெக்டர்களுக்கு ஆணையம் சுற்றறிக்கை

Added : டிச 02, 2019

சென்னை: ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் மாதிரி நன்னடத்தை விதி தொகுப்பில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாநில தேர்தல் ஆணைய செயலர் சுப்ரமணியன், மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில், உள்ளாட்சி தேர்தலுக்கான, மாதிரி நடத்தை விதி தொகுப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப் பட்டுள்ளது. 'அனைத்து ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கோ அல்லது இரு அமைப்புகளுக்கும் சேர்த்தோ தேர்தல் அறிவிக்கப் படும்போது, மாதிரி நடத்தை விதி தொகுப்பு, மாநிலம் முழுவதும் பொருந்தும்' என, தேர்தல் நடத்தை விதியில் கூறப்பட்டிருந்தது. தற்போது, இவற்றில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

திருத்தம் என்ன?
● தற்போது, மாநிலம் முழுவதும் உள்ள, அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாதிரி நடத்தை விதி, ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் பொருந்தும். மாநிலத்தில் உள்ள நகர்ப்புற பகுதிகளுக்கு பொருந்தாது

● மாநிலம் முழுவதும் உள்ள, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கும் போது, மாதிரி நடத்தை விதி, நகர்ப்புற பகுதிகளுக்கு மட்டும் பொருந்தும்; ஊரகப் பகுதிகளுக்கு பொருந்தாது

● மாநிலம் முழுவதும் உள்ள, அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கும் போது, மாதிரி நடத்தை விதி, மாநிலம் முழுமைக்கும் பொருந்தும் என, திருத்தம் செய்யப் பட்டுள்ளது.இந்த திருத்தத்தை, மாவட்ட இருப்பில் உள்ள, அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில கையேடுகளில் திருத்தம் செய்ய வேண்டும். திருத்தத்தை அனைத்து வேட்பாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X