அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் பூசல்: ஜெயகுமார் தகவல்

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை: ''தி.மு.க.,விற்கு, உள்ளாட்சி தேர்தல் காய்ச்சல் வந்து விட்டது. கட்சியில் பூசல் நிலவுவதால், தேர்தலை தடுக்க முயற்சிக்கிறது,'' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:தி.மு.க.,வில், உட்கட்சி பூசல். நிறைய இடங்களில், விருப்ப மனு கொடுக்கவில்லை. திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை, கூடங்குளம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, யாரும் விருப்ப மனு கொடுக்கவில்லை. தேர்தலில், தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டவில்லை. உட்கட்சி சண்டையால், மக்களுக்கு ஜனநாயக முறைப்படி நடக்க உள்ள, உள்ளாட்சி தேர்தலை தடுப்பேன் என, ஸ்டாலின் கூறுவது, ஜனநாயக படுகொலை. தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், தேர்தலை நிறுத்த சதி செய்கின்றன. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில், நாங்கள் உறுதியாக உள்ளோம். நீந்த தெரிந்தவர்களுக்கு, ஆழத்தை பற்றி கவலை இல்லை. மக்கள் எங்களோடு இருப்பதால், உறுதியான வெற்றியை பெறுவோம். தி.மு.க., மீது, ஏற்கனவே மக்கள் கரி பூசி விட்டனர். உள்ளாட்சி தேர்தலில், நாமம் போட்டு விடுவர்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X