பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலை துறைக்கு ஆணையம், 'நோட்டீஸ்'

Added : டிச 02, 2019
Share
Advertisement

சென்னை: நீரில் மூழ்கி, கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், நெடுஞ்சாலை துறை பதிலளிக்க, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பாடி முதல் திருநின்றவூர் வரை, ஆங்காங்கே சாலையின் குறுக்கே, 20க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. ஆனால், தண்ணீர் செல்ல வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை.

இதனால், சி.டி.எச்., சாலையில் கட்டப்பட்டிருந்த தரைப்பாலம், நேற்று முன்தினம் மழைநீரில் மூழ்கியது. அன்று, அவ்வழியாக சென்ற, மண்ணுார்பேட்டை, நேரு நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஷேக் அலி, 49, தரைப்பாலம் பள்ளத்தில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'இந்த சம்பவம் தொடர்பாக, மூன்று வாரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X