ராமதாஸ் மீது தி.மு.க., மான நஷ்ட வழக்கு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராமதாஸ் மீது தி.மு.க., மான நஷ்ட வழக்கு

Added : டிச 02, 2019

சென்னை: பஞ்சமி நிலம் தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ஜ., நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் மீது, எழும்பூர் நீதிமன்றத்தில், தி.மு.க., மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், அசுரன் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன் டுவிட்டர் பதிவில், 'பஞ்சமி நிலம் குறித்து பேசும், அசுரன் படம் அல்ல; பாடம்' என, கருத்து பதிவிட்டு இருந்தார்.

இதற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது' என, டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதே கருத்தை, தமிழக பா.ஜ., நிர்வாகி சீனிவாசனும் கூறினார். 'ஆதாரமில்லாத இந்த குற்றச்சாட்டுகளை திரும்ப பெற வேண்டும்' என, தி.மு.க., சார்பில் வலியுறுத்தப் பட்டது.இந்நிலையில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில், ராமதாஸ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது, மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X