பொது செய்தி

தமிழ்நாடு

காவல் துறை அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு

Added : டிச 02, 2019
Advertisement
 காவல் துறை அதிகாரிகள்  முதல்வருடன் சந்திப்பு

சென்னை: காவல் துறை அதிகாரிகள், முதல்வரை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

டில்லியில், 'ஸ்கோச்' அறக்கட்டளை சார்பில் நடந்த, விருது வழங்கும் விழாவில், தமிழக காவல் துறை, பல்வேறு விருதுகளை பெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்' திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தங்க விருதும்; துாய்மையான காவல் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக, வெள்ளி விருதும் வழங்கப்பட்டன.மாயமானவர்கள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களை ஒப்பீடு செய்து, அடையாளம் காணும், 'மொபைல் ஆப்' உருவாக்கியதற்காக, 'ஸ்கோச்' வெள்ளி விருதும்; திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில், 'மக்களை நோக்கி மாநகர காவல்' என்ற, புதிய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, வெள்ளி விருதும் வழங்கப்பட்டன.

இதையடுத்து, நேற்று, தமிழக உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டி.ஜி.பி., திரிபாதி ஆகியோர், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, விருதுகளை காண்பித்து, வாழ்த்து பெற்றனர். சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சிவில் சப்ளை டி.ஜி.பி., பிரதீப் வி பிலிப், காவல் துறை தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., வினித்தேவ் வான்கடே, சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் கமிஷனர்கள் தினகரன், பிரேம்ஆனந்த் சின்கா, திருநெல்வேலி மாநகர துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.தமிழக உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி., திரிபாதி மற்றும் காவல் துறை அதிகாரிகள், நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வரை சந்தித்தனர். டில்லியில் உள்ள, 'ஸ்கோச்' அறக்கட்டளை, காவல் துறைக்கு வழங்கிய விருதுகளை காண்பித்து, வாழ்த்து பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X