சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோமங்கலம் ஏரி நீரில் மூழ்கி மாணவன் மாயம்

Added : டிச 02, 2019
Advertisement

ஸ்ரீபெரும்புதுார்: சோமங்கலம் ஏரியில், படகில் சென்ற மாணவர், தண்ணீரில் மூழ்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, சோமங்கலம் அடுத்த பழந்தண்டலத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் கார்த்திக், 17; பிளஸ் 2 மாணவர். இரு தினங்களாக பெய்த மழையால், சோமங்கலம் ஏரி நிரம்பி, கலங்கல் வழியே தண்ணீர் வெளியேறுகிறது. ஏரி தண்ணீரை பார்க்க, கார்த்திக், அவருடன் பயிலும் ஒன்பது மாணவர்கள், நேற்று மதியம் சென்றனர். பின், ஏரியின், கரை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த மீன்பிடி துடுப்பு படகில் ஏறி, ஏரியின் மறு கரைக்கு செல்ல முற்பட்டனர். அப்போது, பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால், படகு கவிழும் நிலை ஏற்பட்டது. உடன், படகை கரைக்கு திருப்ப, கார்த்திக்கும், அவரது நண்பர் சஞ்சய், 17, என்பவரும் தண்ணீரில் குதித்தனர்.இதில், கார்த்திக், நீரில் மூழ்கி மாயமானார். சஞ்சய், ஏரியின் நடுவே, ஆழமற்ற இடத்தில், கழுத்தளவு தண்ணீரில் நின்றுவிட்டார். படகில் இருந்த மற்ற மாணவர்கள் பத்திரமாக மறுகரையில் சேர்ந்தனர்.சோமங்கலம் தீயணைப்பு படையினர், நேற்று மாலை வரை தேடியும், மாயமான கார்த்திக் கிடைக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X