சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.75 கோடி மோசடி டி.ஜி.பி.,யிடம் புகார்

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை: 'முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு தொகை தருவதாக ஆசைகாட்டி, 75 கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ரவி. இவர் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் நேற்று, மயிலாப்பூரில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:சென்னை, பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பார்த்திபன், சிவகுமார், ஹரீஸ்வரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர், அரும்பாக்கத்தில், 'ட்ரீ இண்டியா எக்ஸ்ட்ரீம் பி.லிட்.,' என்ற நிதி நிறுவனத்தை நடத்தினர். இவர்களிடம், 100க்கும் மேற்பட்டோர், முகவர்களாக செயல்பட்டு வந்தனர்.அவர்கள், எங்கள் வீடு தேடி வந்து, 'இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், சில மாதங்களில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும். 'முதலீட்டாளர்களுக்கு கார் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பரிசாக வழங்கப்படும்' என்று கூறி, ஆசை காட்டினர்.அதை நம்பி, 8,000த்திற்கும் மேற்பட்டோர், 75 கோடி ரூபாய் முதலீடு செய்தோம். சிலருக்கு மட்டும் இரட்டிப்பு தொகை வழங்கிய, பாத்திபன் உள்ளிட்டோர், நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.இந்த புகார் மனு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பரிந்துரைக்க இருப்பதாக, டி.ஜி.பி., அலுவலக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X