சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Added : டிச 02, 2019
Advertisement

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த களவனுார் பகுதியைச் சேர்ந்தவர், ஜெயகுமார், 27; இவருக்கும், 15 வயது சிறுமிக்கும், நேற்று காலை, உளுந்துார்பேட்டையில், திருமணம் முடிக்க ஏற்பாடுகள் நடந்தன.இதையறிந்த, உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் விழுப்புரம், 'சைல்டு லைன்' திட்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு, மணமகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.மணப் பெண்ணுக்கு, 15 வயது என்பது உறுதி செய்யப்பட்டது. 'சிறுமிக்கு திருமணம் செய்யக் கூடாது' என, அவரது பெற்றோருக்கு அறிவுறுத்தினர். பின், சிறுமியை, விழுப்புரத்தில் உள்ள, சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X