பொது செய்தி

தமிழ்நாடு

முதல் குறை தீர் கூட்டமே ரத்து

Added : டிச 02, 2019
Advertisement

ராணிப்பேட்டை: உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், புதிய மாவட்டங்களில், முதல் குறைதீர் கூட்டமே ரத்தானதால், பொதுமக்கள் வருத்தத்துடன் சென்றனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், வாரம்தோறும், திங்கள் கிழமைகளில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது.கலெக்டர் திவ்யதர்ஷினி, பொது மக்களிடம், 72 மனுக்களை பெற்றார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்தது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறையால், கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல, திருப்பத்துார் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சிவனருள், பொதுமக்களிடம், 50 மனுக்களை பெற்றார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அங்கும் கூட்டம் ரத்தானது.வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், 45, மனுக்களை பெற்றார். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் இங்கும் கூட்டம் ரத்தானது. பின், மூன்று மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், பிற்பகல், 12:00 மணிக்கு, பெட்டி ஒன்று வைக்கப்பட்டு, அதில் மனுக்களை போட்டு செல்லும்படி அறிவிக்கப்பட்டது.இதேபோல, கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டங்களிலும், குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X