சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி நாட்டு வைத்தியர்கள் கைது

Added : டிச 02, 2019
Advertisement

வாலாஜாபேட்டை: வாலாஜாபேட்டையில், போலி நாட்டு வைத்தியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், கொளத்தேரியைச் சேர்ந்தவர், சுப்பிரமணி, 30; வெல்டர். இவர், வாலாஜாபேட்டை போலீசில், நேற்று முன்தினம் கொடுத்த புகார்:வயிற்று வலியால் அவதிப்பட்ட நான், வாலாஜாபேட்டையில் உள்ள நாட்டு வைத்தியர்களை அணுகினேன். அவர்கள், 1,000 ரூபாய் வாங்கி, சூரணம் கொடுத்தனர்.அதை சாப்பிட்டும், வலி குறைய வில்லை. அவர்களிடம் மீண்டும் சென்றபோது, 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், சிறப்பு சூரணம் கொடுப்பதாகவும், சாப்பிட்ட சில வினாடிகளில், வலி போய் விடும் என்றனர். அவர்கள், போலி நாட்டு வைத்தியம் செய்து, என்னை ஏமாற்றி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தார். போலீசார் விசாரித்து, வாலாஜாபேட்டையைச் சேர்ந்த போலி வைத்தியர்கள் ராஜா, 48, ரமேஷ், 46, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X