சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படாளம் பாலாற்றில் மிதந்த குழந்தை

Added : டிச 02, 2019
Advertisement

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே, பாலாற்று நீரில் மிதந்த பச்சிளம் குழந்தையை, அப்பகுதியினர் மீட்டு, போலீசில் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், படாளம் பாலாற்றில், வடகிழக்கு பருவமழையால், தண்ணீர் பாய்கிறது.நேற்று காலை, இந்த பாலாற்று நீரில், பச்சிளம் பெண் குழந்தை மிதப்பதை கண்ட பொதுமக்கள், குழந்தையை மீட்டனர்.பிறந்த குழந்தையின், தொப்புள் கொடிக்கூட அகற்றப்படாத நிலையில், இறந்த நிலையில் கிடந்ததை கண்டு, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.'நேற்று முன்தினம் இரவு, குழந்தை பிறந்திருக்கலாம். பிறந்த சில மணி நேரத்தில், குழந்தையை ஆற்றில் வீசி உள்ளனர். வீசியவர் குறித்து விசாரித்து வருகிறோம்' என, படாளம் போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X